டாஸ்மாக் விற்பனையாளர் வீட்டில் நகை திருட்டு

காஞ்சிபுரம், செவிலிமேடு, அம்பிகா நகரில் வசித்து வருபவர் பாஸ்கரன் (42). இவர், காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி, தன் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம், சுருட்டல் கிராமத்திற்கு குடும்பத்தினருடன் சென்றார்.

பின் பாஸ்கரன் நேற்றுமுன்தினம் (செப்.,15) வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி