திருவள்ளூர்: கன்டெய்னர் லாரி மீது டிப்பர் லாரி மோதி விபத்து (VIDEO)

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் முருகம்பட்டு என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து வந்த கண்டைனர் லாரியில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உபகரணங்களை 884 பெட்டிகளாக எடுத்து வந்துள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிகண்டன் என்பவர் (வயது 29). சென்னை நோக்கி வந்த இந்த கண்டைனர் லாரி மேற்கண்ட இடத்தில் வரும்போது எதிரே ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்குச் செல்வதற்காக மிகவும் அகலமான நீளமான டிப்பர் லாரி இரும்புப் பாடியுடன் வந்துள்ளது. இந்த லாரியும் ஆந்திராவை நோக்கிச் செல்லும்போது கண்டைனர் லாரியில் மோதி விபத்து நடந்துள்ளது. 

இதில் கண்டைனர் லாரியின் இரும்புப் பகுதி கிழிந்து எறியப்பட்டு, கண்டைனர் லாரிக்குள் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உபகரணங்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ளவை சாலையில் சிதறின. அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் இவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். மிச்சம் மீதி இருக்கும் சிசிடிவி உபகரணங்கள் சாலையில் சிதறி உள்ளன. இந்த விபத்தில் கண்டைனர் லாரி ஓட்டுநர் மணிகண்டன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சாலையில் சிதறிய சிசிடிவி கேமராக்களுக்கு தற்போது போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி