செங்கல்பட்டு: ரயில் மோதி வாலிபர் பலி

செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் வடமாநில வாலிபர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்தார். சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற மின்சார ரயில் மோதியதில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி