வண்டலூரில் லாரி மோதி வாலிபர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வினோத் (38). நேற்று முன்தினம் (டிசம்பர் 26) இரவு, தாம்பரத்தில் இருந்து பெருங்களத்துார் நோக்கி, ஜி.எஸ்.டி. சாலை வழியாக சென்றார். பெருங்களத்துார் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே, பின்னால் வந்த கண்டைனர் லாரி மோதி வினோத், சம்பவ இடத்திலேயே இறந்தார். தாம்பரம் போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். லாரி ஓட்டுனரான, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (56), என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி