செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோஸ்சவ பெருவிழா

அருள்மிகு ஸ்ரீபாடலாத்ரி நரசிம்மபெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ பெருவிழா துவக்கம் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக் கோவில். கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம் 10 நாட்களும் அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடையாற்றி உற்சவம் விமரிசையாக நடைபெறும். 

இந்த ஆண்டு வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றம் 31-ம் தேதி காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை வானவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் உற்சவர் பிரகலாத வரதர் த்வஜாரோஹண மண்டபத்தில் எழுந்தருளி கோவில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பத்து நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்தில் ஸ்வாமி எழுந்தருள்வார். இன்று கருடவாகன உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பத்து நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ பெருவிழாவில் 5ம் தேதி மாலை யானை வாகன உற்சவமும் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வரும் 6ம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி