திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள மேலக்கோட்டையூர் ஊராட்சியில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட உலகத் தரத்திலான நீச்சல் குளத்தை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 19) திறந்து வைத்தார். மேலும், ரூ.7.82 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட டேபிள் டென்னிஸ் அரங்கையும் அவர் திறந்து வைத்தார். பின்னர் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.