செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில், இரும்புலிச்சேரியில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்ற பிரியதர்ஷினி (23) மற்றும் அவரது தோழி மோனிகா (19) ஆகியோர் நேற்று (மே. 20) பாலாற்றில் குளிக்கச் சென்றனர். நீச்சல் தெரியாத மோனிகா நீரில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற பிரியதர்ஷினியும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.