இதனால் சென்னையின் நுழைவாயிலாக உள்ள ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தென் மாவட்டத்திலிருந்து அதிக அளவிலான கார் மற்றும் வேன்கள் அரசு பேருந்துகள் சென்னை நோக்கி வருவதால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது இதனால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்கின்றன.
இருப்பினும் ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் தற்போது போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.