செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில், ஈச்சங்காடு பேருந்து நிலையம் அருகே தவெக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, திருப்போரூர் தவெக எம்எல்ஏ விஜயராஜ் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு நீர்மோர், ரோஸ் மில்க், குளிர்பானங்கள் மற்றும் தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் தீனா, மாம்பாக்கம் வீரா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.