சென்னையை தலைமையிடமாகக் கொண்ட மாநகர் போக்குவரத்துக் கழகம், தமிழகத்தின் அடையாளச் சின்னங்களான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், கிராமிய தெருக்கூத்து கலைஞர், சென்னை கலங்கரை விளக்கம், உழைப்பாளர் சிலை போன்றவற்றை அலங்கரிக்கும் புதிய 'டபுள் டெக்கர்' பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், 'தமிழ் வாழ்க' என்ற வாசகமும் இருபுறமும் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய பேருந்துகள் சென்னை மாநகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயக்கப்படும்.