மாமல்லபுரத்துக்கு ஸ்பெயின் நாட்டு தூதர் வருகை

இந்தியாவுக்கான ஸ்பெயின் நாட்டு தூதர் ஜூவான் அன்டோனியோ மார்ச் புஜோல் மாமல்லபுரத்தில் உள்ள புராதன நினைவுச் சின்னங்களை பார்வையிட்டார். கடற்கரை கோயில் பகுதிக்கு வந்த அவரை தொல்லியல் துறை அலுவலர் ஸ்ரீதர் மற்றும் சுற்றுலா அலுவலர் சக்திவேல் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்திற்குள் சென்ற தூதர், பல்லவ மன்னர்களால் உருவாக்கப்பட்ட கடற்கரை கோயிலின் அழகிய தோற்றத்தை கலைநயத்துடன் கண்டு ரசித்தார்.

தொடர்புடைய செய்தி