சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆன்லைன் டெலிவரி ஊழியர் பிரபாகரன் (21) பொருட்களை டெலிவரி செய்ய சென்றபோது, 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து செல்போனை பறித்துச் சென்றனர். அதிர்ச்சியடைந்த அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த பெரும்பாக்கம் போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.