இந்த நிலையில் இந்த நீர்ப்பிடிப்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மதுராந்தகம் தாலுக்கா அலுவலகம் மற்றும் மாமண்டூர் வி.ஏ.ஓ அலுவலகத்தில் மனு வழங்கி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இதை பயன்படுத்தி மாமண்டூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விடுவார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் மாமண்டூர் பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.