சிங்கப்பெருமாள் கோவிலில் குட்கா விற்றவருக்கு 'காப்பு'

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், 10,000 ரூபாய் மதிப்பிலான 4.5 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடையின் உரிமையாளர் சுறா குமார் என்ற ரவிக்குமார் (38) கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்புடைய செய்தி