மறைமலை நகரில் மது பிரியருக்கு காவல்துறையினர் அட்வைஸ்

உங்கள் குடும்பத்திற்கு நல்லது செய்யணுமா இத்தோட இந்த குடியை விடுங்க. போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய மது பிரியருக்கு காவல்துறையினர் அட்வைஸ். 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த மல்ரோசாபுரம் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகன ஓட்டுனர் ஒருவர் மது போதையில் வந்துள்ளார். பின்பு அவரின் ஆவணங்களை சோதனை செய்துவிட்டு அவர் மதுபோதையில் இருந்ததை உறுதி செய்துவிட்டு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

பின்பு அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ் காந்தி அவர்கள் மது போதையில் வந்த வாகன ஓட்டியிடம் நீங்கள் குடிக்கிறதால் உங்களுக்கு மட்டும் கஷ்டம் கிடையாது உங்கள் குடும்பத்திற்கும் கஷ்டம் எனவும் நீங்கள் குடித்துவிட்டு ரோட்டுக்கு வந்தால் உங்களுக்கும் நஷ்டம் எதிரே வருவங்களுக்கும் நஷ்டம் என்றும் 100 ரூபாய்க்கு குடித்துவிட்டு தற்போது பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்டுறீங்கள் அந்த நூறு ரூபாய் இருந்தால் உங்கள் குடும்பத்திற்கு கொடுக்கலாமல்லே என்றும் உங்களால் முடிந்தால் இந்த குடியை இதோடு விடுங்கள் நல்லா இருப்பீங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.!!!

தொடர்புடைய செய்தி