திருப்போரூர் அருகே விமானம் விழுந்து விபத்து; உயிர் தப்பிய விமானிகள்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ஒரு தனியார் உப்பு தொழிற்சாலையில், தாம்பரம் விமானப் படைக்குச் சொந்தமான விமானம் வானில் பறந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் பேராசூட் மூலம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விமான விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி