செய்யூர் அருகே குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அடுத்த கயநல்லூர் கிராம மக்கள், செய்யூர் வட்டாட்சியர் வீட்டு மனை பட்டா வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் நிலம் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைவனம் சர்வே எண் 66/2A-ல் மக்கள் குடியேற முயன்றபோது காவலர்கள் தடுத்ததால் வருவாய்த்துறையினர் மற்றும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி