இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு பின்னர் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை துறை, மருத்துவத்துறை சார்பாக 60 பயனாளிகளுக்கு ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு துறை சார்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் வரதன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.