பழத்தின் ரகத்திற்கு ஏற்றபடி ஒரு கிலோ 100 ரூபாய் முதல், 150 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மாம்பழங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து, பழ வியாபாரிகள் கூறியதாவது: மாம்பழம் சீசன் நேரங்களில், சாலையோரத்தில் மாம்பழங்களை விற்பனை செய்து வருகிறோம். இப்பகுதியில் விளைந்த ருமானி, பெங்களூரு போன்ற பல்வேறு மாம்பழ ரகங்களை விற்பனை செய்து வருகிறோம். இயற்கையாகப் பழுத்த மாம்பழங்கள் என்பதால், பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
சண்முகம், வைகோவை கடுமையாக சாடிய ஆ.ராசா எம்.பி