இதில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற காதலி சபரீனா பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில், அவரை அருகே இருந்த பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி செய்தபோது மாணவி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனைக் கேட்ட காதலன் யாகேஸ்வரன் காதலி இறந்த துக்கம் தாங்காமல் வேகமாக ஓடிச் சென்று கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற பாண்டிச்சேரி அரசுப் பேருந்து முன் பாய்ந்ததில் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்து சென்றதில் உடல் 2 துண்டுகளாக ஆகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற மாமல்லபுரம் போலீசார் உடலை கைப்பற்றி இரு உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.