பனையூர் அருகே காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு; போலீசார் விசாரணை

பனையூர் பகுதியில் நேற்று ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக கானத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பனையூர் பகுதியில் தவெக கட்சியின் தலைமை அலுவலகம் இருப்பதால் அப்பகுதியில் எப்போதும் பாதுகாப்பு பணியில் போலீசார் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி