பம்மலில் ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்

பம்மலில் ஸ்ரீ தேவி தண்டுமாரியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். சென்னை அடுத்த பம்மல் அண்ணா நகர், சத்யா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி தண்டுமாரியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது. 

அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று 10 நாட்கள் யாகபூஜை செய்த கலசநீர் மேள, தாளம் முழங்க வேத மந்திரங்கள் ஓதி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று கோபுர கலசத்தின் புனிதநீர் மக்கள் மீது தெளிக்கப்பட்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டவாறு கோபுர தரிசனம் செய்தனர். மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆலய நிர்வாகிகள் உட்பட ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி