இதில் கார் பலத்த சேதம் அடைந்து தேசிய நெடுஞ்சாலையின் நடுவே நின்றதால் திருச்சி டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இருந்தது. காலை நேரம் என்பதால் அதிகப்படியான வாகனங்கள் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குப் படையெடுத்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
இதனால் வேலைக்குச் செல்லவோர், பள்ளி கல்லூரிக்குச் செல்லவோர், கால கிராமத்துக்குச் செல்லவோர் ஆகியோர் தாமதமாயினர். காரில் வந்தவர்கள் இருவரும் எந்தவித காயம் இன்றி உயிர்த்தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார் காரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.