கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கணபதி பூஜை, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, பூர்ணாவதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஆனது மங்கள வாத்தியம் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நடைபெற்ற யாகசாலை பூஜையில் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.