அவரை காண நீலாங்கரையிலுள்ள அவரது வீட்டிற்கு பலமுறை சென்று அவரைச் சந்திக்க முடியாமலும் அவர் வீட்டின் கேட் அருகே படுத்து உறங்கியும் இருந்துள்ளார். மேலும் விஜய் கட்சி மாநாட்டிற்கும் சென்று அவரைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார். இந்நிலையில் அவரை நேரில் சந்தித்து உரையாடி அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்துடன் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி தனது சொந்த ஊரிலிருந்து விஜய்யை காண நடைபயணம் மேற்கொண்டார்.
34 வது நாளான இன்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே வந்தவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது விஜய் என் அண்ணன் மற்றும் தந்தை போன்றவர். அவர் மீது அதிக மரியாதையும் அன்பும் வைத்துள்ளேன். அவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நடைபயணமாக வருவதாக தெரிவித்தார். மேலும் அவரைச் சந்தித்தபிறகு மொட்டையடித்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.