இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் தொண்டர்கள் முன்புறம் வராமல் இருக்க, முள் வேலியுடன் வெல்டிங் செய்யப்பட்ட தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மின் கோபுரங்களில் ஏறுவதை தடுக்க மின் விளக்குகளைச் சுற்றி இரும்பினால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் பாமகவின் சாதனைகளை விளக்கும் 1500 டிரோன்கள் கண்காட்சியும் நடக்கிறது. கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் ஆயிரக்கணக்கில் வன்னியர் சங்க கொடிகள் கட்டப்பட்டு மஞ்சள் நிறமாக காட்சி அளித்து வருகிறது. மாநாட்டு பணிகளை பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வடக்கு மண்டல இணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. துணை பொது செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், வன்னியர் சங்க செயலாளர் வைத்தி, பா.ம.க. மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.