முகையூரில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம், முகையூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு. பாபு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 68.22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்ட உத்தரவிட்டார். ஒன்றிய செயலாளர் எம். எஸ். பாபு தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில், சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு. பாபு ரிப்பன் வெட்டி கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமி மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சுபலட்சுமி மற்றும் கல்வி அலுவலர்கள், திமுக நிர்வாகிகள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர். மேலும், கலைத் திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி