மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் வாகன ஓட்டிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆத்தூர் சுங்கச்சாவடி நிர்வாகம் இன்று காலை முதல் வாகனங்களுக்கு கட்டாய வசூல் செய்வதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் 1 கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசலில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே சுங்கச்சாவடி நிர்வாகம் இலவசமாக வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.