மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணிக்கு மேல் தொடர்ந்து பனிப்பொழிவு இதன் காரணமாக வாகன ஓட்டிகளும் அவதிக்கு உள்ளானர். பயிர்களும் கருகும் நிலை சென்னை மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை வழக்கத்தை விட அதிக பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளும் அவதிக்கு உள்ளானர். முகப்புடன் விளக்குடன் வாகனங்கள் பயணம் மேற்கொண்டன. மேலும் தற்போழுது இந்த பனிப்பொழிவின் காரணமாக வேர்க்கடலை, தர்பூசணி, நெல் பயிர் போன்ற பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத பனிப்பொழிவு என்பதால் விவசாயிகளும் வேதனை அடைந்துள்ளனர்.