புதுப்பட்டினத்தில் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா

புதுப்பட்டினத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளில் அன்னதானம் வழங்கிய மாவட்ட அவைத் தலைவர் எம். தனபால். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் எம். தனபால், மாவட்ட மீனவரணிச் செயலாளர் கவிஞர் கலியபெருமாள், புதுப்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் டாக்டர் காயத்ரி தனபால் ஆகியோர் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதுடன் கேக் வெட்டி ஏழை எளிய மக்களுக்கு இனிப்புடன் அன்னதானம் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியச் செயலாளர் விஜயரங்கன், பொறுப்பாளர்கள் காதர்உசேன், யாசர் அராபத், ஸ்டுடியோ மோகன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், மகளிரணி பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி