இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: -எங்கள் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறோம். அறுவடை செய்யப்படும் பயிர்களை உலர்த்துவதற்கு களம் இல்லாததால் சாலையில் உலர்த்தி வருகிறோம். சாலையில் பயிர்களை கொட்டி உலர்த்துவதால் வாகனங்களின் சக்கரத்தில் சிக்கி பயிர்கள் வீணாகின்றன. நெற்களம் அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நெற்களம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிரபல ஹாலிவுட் வில்லன் நடிகர் அலெக்சாண்டர் மார்ட்டன் காலமானார்