இதையடுத்து, பூஷ்ணத்தின் கைப்பையில் பணத்தை வைத்துக்கொண்டு, சிங்கபெருமாள் கோவிலில் உள்ள தனியார் அடகு கடையில், ஏற்கனவே வைத்திருந்த நகைகளை மீட்க சென்றனர்.
அனுமந்தபுரம் சாலையில் உள்ள கடையில் இருவரும் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பொடி தூள் போல ஏதோ விழவே, இருவருக்கும் உடல் முழுதும் அரிப்பு ஏற்பட்டது. அங்கிருந்த இளைஞர்கள் தண்ணீர் கொடுத்து உதவி செய்தனர். அதன்பின், பூஷ்ணம் பையை எடுத்து பார்த்த போது 70, 000 ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, பூஷ்ணம் மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.