செங்கல்பட்டு: போலீசாருடன் பொதுமக்கள் தள்ளுமுள்ளு

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே ஓதியூர் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கிய நிலையில், மண் பரிசோதனை செய்ய வந்த நிர்வாகத்தினருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில், ஓதியூர் கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் ஓதியூர் ரஞ்சித்தை காவல்துறை கைது செய்தது. இதனைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி