செங்கல்பட்டு: ஓஎம்ஆர் சாலையில் பயங்கர தீ விபத்து

சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள செங்கன்மால் பகுதியில், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காகக் கொண்டு வரப்பட்ட ராட்சத பைப்புகள் தீப்பற்றி எரிந்தன. டாஸ்மாக் பாரில் வேலை செய்பவர்கள் அட்டைப் பெட்டிகளைக் கொளுத்தியதில், தீ அருகில் இருந்த பிளாஸ்டிக் ராட்சத பைப்புகளில் பரவியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, சுமார் 2 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறுசேரி தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர்புடைய செய்தி