புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் அய்யப்பன், டாக்டர் எஸ்.ஜி. பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாநாட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர்கள், புற்றுநோய் அறிவியல் வல்லுநர்கள், மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் இந்தியாவிலும், தமிழகத்திலும் அதிகளவில் பரவிவரும் புற்றுநோயைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய உணவுமுறைகள், புகையிலை பயன்பாடு, புகைபிடித்தல் தவிர்த்தல், புற்றுநோய் தடுப்பு மருந்து, தடுப்பூசி ஆராய்ச்சி ஆகியவை பற்றி கலந்துரையாடினர்.
மேலும் உலக அளவில் புற்றுநோயைக் கட்டுப்படுத்த வருடந்தோறும் மருத்துவ விழிப்புணர்வை உலக சுகாதார நிறுவனம் தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் புற்றுநோய் நிபுணர்கள் மாநாட்டின் விழாமலர் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற புற்றுநோய் நிபுணர்கள் பல்வேறு தலைப்புகளில் புற்றுநோய் விழிப்புணர்வு, ஆரம்பகட்ட நோய் கண்டறிதல் குறித்து விரிவாகப் பேசி, ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டனர்.