காஞ்சிபுரம் பச்சையம்மன் கோயிலில் தலைமுடி சேகரிக்க ஏலம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா, தண்டரை ஊராட்சிக்கு உட்பட்ட, சேர்ப்பாக்கம் கிராமத்தில் பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோவில் உள்ளது. பக்தர்கள் வேண்டுதலுக்காக காணிக்கையாக செலுத்தும் தலை முடியை சேகரிக்க, ஆண்டுதோறும் ஹிந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், ஏலம் விடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான காணிக்கை தலைமுடி சேகரிப்புக்கான ஏலம், உத்திரமேரூர் சரக அறநிலையத்துறை ஆய்வாளர் பிரீத்திகா தலைமையில் நேற்று நடந்தது. அதில், 2025 - 26ம் ஆண்டுக்கான காணிக்கை தலைமுடி சேகரிப்பு உரிமம், 1.73 லட்சத்திற்கு ஏலம் போனது. இதில், கோவில் செயல் அலுவலர் தீன்ஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி