காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து நேற்று (மே. 26) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாகவும், மத்திய அரசின் விவசாய கொள்கையால் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் நந்தகோபால் தலைமையில் மாநில துணை தலைவர் நேரு, செயலாளர் சாரங்கன், பொருளாளர் செல்வம் மற்றும் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.