அச்சரப்பாக்கம் இளைஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் ஏற்பாட்டில் கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் கண்ணன் தலைமையிலும் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு நீர், மோர், பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து நீர், மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கோகுலகண்ணன், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த தண்ணீர் பந்தலின் மூலம் கோடை வெயில் முழுவதும் தொடர்ச்சியாக நீர் மோர் வழங்கப்படும் என இளைஞரணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி