செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூரில் வசிக்கும் ஒப்பந்த கூலி தொழிலாளி ஏழுமலை என்பவரின் குடிசை வீட்டில், 19ஆம் தேதி இரவு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பீரோ, பிரிட்ஜ், மேசை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. மேலும், வீட்டில் இருந்த அனைத்து ஆவணங்களும் தீயில் கருகிவிட்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.