அதேபோல் இவர்கள் இருவரும் நேற்று இரவு(செப்.27) இரண்டாவது தளத்தில் மது அருந்தி கொண்டிருக்கும் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் ஆத்திரமடைந்த அசோக் அருகில் இருந்த கட்டையால் தலையில் அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான். தகவல் அறிந்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கை ரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்துள்ளனர்.
மேலும் திருப்போரூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த கொலை எதற்காக நடைபெற்றது இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் காரணமா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.