ஒரு அறை கொண்ட 10 கட்டடங்கள் தனி, தனியாக ஏற்படுத்தப்பட்டு, அவை குத்தகைக்கு விடப்பட்டு பல்வேறு கடைகள் அச்சமயம் செயல்பட்டு வந்தன. பின், நாளடைவில் அக்கட்டடங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடு இல்லமால் வீணாகி வருகிறது.
இதனால், பேரூராட்சிக்கான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, அக்கட்டட பகுதிகள், செடிகள் வளர்ந்தும், சமூக விரோதிகள் புகலிடமாகி வருவதாகவும் அப்பகுதியினர் பலரும் புகார் கூறி வருகின்றனர்.