அச்சரப்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி 10 மாடுகள் பலி

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் உள்ள விளைநிலத்தில் பெரும்பேர்கண்டிகை மற்றும் சிறுபேர்பாண்டி கிராமத்தை சேர்ந்த மாடுகள் மேய்ச்சலுக்கு வழக்கம் போல் சென்றன. அப்போது நேற்றிரவு காற்றுடன் மழை பெய்ததால் மின் கம்பம் மரங்கள் சாய்ந்து மின் கேபிள்கள் அறுந்து விழுந்து கிடந்தன. அப்போது பெரும்பேர்கண்டிகை பகுதி சேர்ந்த மாடுகளும் மற்றும் சிறுபேர்பாண்டி மாடுகள் என 50க்கும் மேற்பட்ட மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. 

அப்பொழுது அறுந்து கிடந்த மின் கேபிள் மின்சாரம் தாக்கி பெரும்பேர்கண்டிகை ஒரு கறவை மாடும் சிறுபேர்பாண்டி பகுதியை சேர்ந்த 10 பசு மாடுகளும் மின்சாரம் தாக்கி பலியாயின. சிறுபேர்பாண்டி பகுதி சேர்ந்த சுரேஷ் என்பவர் உடைய ஒரே குடும்பத்தில் உயர் ரக கறவை பசு மாடுகள் 6 இறந்து இருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மின்சார வாரியம் வருவாய்த் துறையினர் கால்நடை துறை அதிகாரிகள் விரைந்து வந்து விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி