காஞ்சி: ஆசைகாட்டி பெண்ணிடம் ரூ.10 லட்சம் சுருட்டிய வாலிபர் கைது

திருப்பத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் மகள், பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். மேட்ரிமோனி மூலம் அறிமுகமான 24 வயது வாலிபர், தான் துபாய் மற்றும் சென்னையில் 'நிக்ஸ் குரூப்' நிறுவனம் நடத்துவதாகவும், வருமான வரித்துறை பண பரிவர்த்தனையை முடக்கியுள்ளதாகவும் கூறி, அப்பெண்ணின் டெபிட் கார்டை பெற்று, சிறுகச் சிறுக 9.80 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார். சந்தேகமடைந்த அப்பெண் அளித்த புகாரில், போலீசார் கோபிநாத் என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி