தற்போது, கால்வாய் முறையாக பராமரிப்பு இல்லாமலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் உள்ளது. கடந்த வாரம் பெய்த மழையால், சிலாம்பாக்கம் கிராமத்தில் நெற்பயிர் நடவு செய்த நிலங்களில், மழைநீர் தேங்கியுள்ளது. மருதம் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், இந்த நீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மழைநீர் சூழ்ந்துள்ள பயிர்கள் அழுகி சேதமடைந்து வருகின்றன.
எனவே, மருதம் ஏரி நீர்வரத்து கால்வாயை சீரமைத்து, மழைநீரால் சேதமடைந்த நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வேளாண் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: மழைநீரில் சேதமடைந்த பயிர்கள் குறித்து விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்பின், முறையாக நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.