செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அடுத்த அருந்ததியர்பாளையத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், (35); தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் (செப்.,23) மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் தன் 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார். நேற்று (செப்.,24) மீண்டும் வந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து, வினோத்குமார் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று தொடர்ந்து மறைமலைநகர் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இப்பகுதிகளில் காவல்துறையினரை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.