கிழக்கு தாம்பரம் - மேற்கு தாம்பரம் பகுதிகளை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை, பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றி பூட்டிக்கிடந்த நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சீரமைக்கப்பட்டு, இன்று (மே. 27) மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தாம்பரம் எம்எல்ஏவும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சரத்குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.