தாம்பரம் மாநகராட்சி 2026-27ம் ஆண்டிற்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், மொத்த வருவாயாக 1,447 கோடி ரூபாயும், செலவாக 1,445 கோடி ரூபாயும் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 1.92 கோடி ரூபாய் உபரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மல்டி லெவல் கார் பார்க்கிங் உட்பட 68 புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.