தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் - ஜோதிகா தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு பள்ளி கட்டணம் செலுத்த இன்று (மே. 29) காலை பள்ளிக்குச் சென்றிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து பீரோவை உடைத்து 10 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தாலி செயின் திருடு போன நிலையில் ஜோதிகா கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.