இச்சாலை கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டிருந்ததால், தினசரி பள்ளி, கல்லூரி மற்றும் விவசாய வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாக சிரமப்பட்டு வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முதல்வர் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 89 லட்சத்தில், சாலை சீரமைப்புப் பணி துவங்கப்பட்டு நடந்து வந்தது. பருவமழை குறுக்கிட்டதால் சாலை பணி நிறுத்தப்பட்டது. பருவமழை முடிந்தும், சீரமைப்புப் பணி துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால், சாலையில் செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக சாலை சீரமைப்புப் பணி மீண்டும் துவங்கி நடந்து வருகிறது.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!