கடம்பாடியில் அரசு தொகுப்பு வீடு கட்டித்தர கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தில் வசிப்பவர் ஜெயக்குமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளவர் தேன்மொழி. இவரது கணவர் சுரேஷ் ஊராட்சி மன்றத் தலைவர் பெண் என்பதால் அனைத்துப் பணிகளிலும் அவரது கணவர் சுரேஷ் தலைவர் போன்று செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயக்குமாருக்கு தொகுப்பு வீடு வந்துள்ளதாகவும், கூரை வீட்டை இடித்து வீடு கட்ட கட்டிடப் பணியை ஆரம்பிக்குமாறு ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சுரேஷ் சொல்லியதாக கூறப்படுகிறது. 

அதனால் ஜெயக்குமார் கூரை வீட்டை இடித்து கையில் இருந்த பணத்தில் பேஸ் மட்டம் வரை கட்டிடப் பணியை செய்துள்ளார். இரண்டு வருடங்களாக ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை அணுகி செய்து முடித்த பணிக்கான கூலியை கேட்டுள்ளார். அதற்கு உனது வங்கி கணக்கை சரிபார்க்கவும், இரண்டு நாட்களில் உனக்கு பணம் வரும் என்று சொல்லியதாக கூறப்படுகிறது. ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் வார்த்தையில் சந்தேகம் அடைந்த ஜெயக்குமார் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொகுப்பு வீடு குறித்து கேட்டுள்ளார். அதற்கு பிடிஓ உங்களுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை எதுவும் வழங்கவில்லை எனவும், உங்களுக்கு தொகுப்பு வீடே ஒதுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி